search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் முக ஸ்டாலின்"

    • மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என முக ஸ்டாலின் கூறினார்.
    • கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    சச்சின் டெண்டுல்கரின் 50-வது பிறந்தநாளன இன்று, அவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அவருக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 50-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் மகிழ்ச்சி, அமைதி, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல்வர் முக ஸ்டாலின் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர்.
    • கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடினோம்.

    சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசும் போதும் சுவாரஸ்யமான தகவல்களை தெரிவித்து தனது உரையை நிறைவு செய்தார்.

    அவர் கூறியதாவது:-

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரோட இல்லத்தில் தான். எனது தந்தை முதல்வர் முக ஸ்டாலின் மேயர் ஆனதும் வேளச்சேரிக்கு சென்று விட்டோம். நான் சிறு வயதாக இருக்கும் போது கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் வீட்டிற்கு முன்பு உள்ள இடத்தில் நானும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவோம்.

    கலைஞருடனும் கிரிக்கெட் விளையாடிருக்கிறேன். வருவாங்க பந்து வீசிட்டு பேட் செய்து விட்டு போயிருவாங்க. கலைஞர் மட்டும் இல்ல தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினுடனும் விளையாடி இருக்கிறேன். முதல்வர் மிகச் சிறந்த லெக் ஸ்பின்னர். அவர் பந்து வீசினா யாராலும் அடிக்கமுடியாது.

    இங்க எப்படி சிக்சர் அடிக்கிறாரோ அதுபோலதான் பவுலிங்லயும் சிறப்பாக செயல்படுவார்.


    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

    • சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
    • இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் புதிதாக நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கேலரிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் ஐசிசி சேர்மன் சீனிவாசன், முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான டோனி மற்றும் பிராவோ ஆகியோர் கலந்துகொண்டனர்.

    சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஸ்டாண்டிற்கு கலைஞரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    ரூ.139 கோடியில் புனரமைக்கப்பட்ட சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தையும் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய ஸ்டாண்டையும் முதலமைச்சர் முக ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சேப்பாக்கம் மைதானம் புதுப்பிக்கப்பட்ட நிலையில் முதல் போட்டியாக இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறுகிறது.

    • சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார்.
    • விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 2011 உலக கோப்பை போட்டியையொட்டி புதுப்பிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியாக புதுப்பிக்கும் பணி நடந்தது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள அண்ணா பெவிலயன் பகுதி இடிக்கப்பட்டு நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளது. வீரர்கள் தங்கும் அறை, அலுவலகங்கள், ரசிகர்கள் அமரும் இடம் உள்ளிட்டவை புதிதாக கட்டப்பட்டது.

    சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் புதிதாக கட்டப்பட்ட கேலரியை (ஸ்டாண்டு) முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5.30 மணிக்கு திறந்து வைக்கிறார். கலைஞர் கருணாநிதி பெயரில் அமைந்துள்ள ஸ்டாண்டை அவர் திறந்து வைக்கிறார். விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனி உள்ளிட்டோர் நிழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்.

    இதற்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்ட போது அதை கருணாநிதி திறந்து வைத்தார். தற்போது அவரது பெயரிலான பெவிலியனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். புதுப்பிக்கப்பட்ட சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் முதல் போட்டியாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 22-ந்தேதி மோதுகின்றன.

    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் டெஸ்ட் தொடரில் மோதி வருகிறது. இதனையடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதவுள்ளது. முதல் போட்டி மும்பையிலும் 2-வது போட்டி விசாகப்பட்டினத்திலும் 3-வது போட்டி சென்னையிலும் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதிய பெவிலியன்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வரும் 17-ம் தேதி திறந்து வைக்கிறார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிஎஸ்கே அணியின் கேப்டனுமான டோனியும் பங்கேற்கின்றனர்.

    • மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்திட வேண்டும்.
    • பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்புப் பணியினை நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகள் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்கள், பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் விடுதிகள் பராமரிப்பு, இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மயானப்பாதை வசதி ஏற்படுத்தித்தருதல், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் ஆகியவை குறித்தும், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வரும் புதிய திட்டங்கள் குறித்தும் முதல்-அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும் எனவும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும் எனவும், அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமுமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து ஒவ்வொரு வாரமும் ஊரக வளர்ச்சித் துறையுடன் இணைந்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்திட வேண்டும் என்றும், பிரதமர் முன்னோடி கிராம திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தி பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

    வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி, வேலைவாய்ப்பு, கருணை அடிப்படையிலான பணி நியமனம், கல்வி உதவித் தொகை ஆகியவற்றை எவ்வித தாமதமுமின்றி வழங்கப்பட வேண்டும் என்றும், குடியிருப்புகள் மற்றும் ஒய்வூதியம் கோரி வழங்கப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படுகிறதா என்பதை துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    மாவட்ட மற்றும் உட்கோட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டங்கள் மாதந்தோறும் நடத்திட வேண்டும் என்றும், பழங்குடியினர் சாதிச்சான்றிதழ் மெய்த்தன்மை சரிபார்ப்புப் பணியினை நிலுவையின்றி விரைந்து முடித்திட வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம், தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களை சேர்த்து வாரிய உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினர்.
    • பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கப்பட்டது.

    சென்னை:

    பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டுள்ள நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு அமைச்சர் பெருமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத் தொகையான ஒரு கோடியே 29 இலட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் இன்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு தலைமைக் கொறடா கோவி. செழியன் ஆகியோர் வழங்கினர்.

    முதலமைச்சர் 19.12.2022 அன்று நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்தைத் தொடங்கி வைத்து. அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அரசுடன் மக்களும் கைகோர்க்க வேண்டும் என்றும், இதற்கு தேவையான நிதியை வழங்கிடக் கோரியும் கோரிக்கை விடுத்தார். முதலமைச்சர் இவ்விழாவிலேயே ரூபாய் 5 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

    இந்தக் கோரிக்கையை ஏற்று, பல்வேறு அமைப்பினர் நிதி உதவி வழங்கி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒருமாத ஊதியத்தினை நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்காக வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஈ.ஆர். ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச். ஜவாஹிருல்லா, சட்டன்ற உறுப்பினர் பி. அப்துல் சமது ஆகியோரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கு. சின்னப்பா, எம். பூமிநாதன், டாக்டர் டி. சதன் திருமலைகுமார், ஏ.ஆர்.ஆர். ரகுராமன் ஆகியோரும் தங்களது ஒருமாத ஊதியத்திற்கான காசோலைகளையும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. சின்ராஜ் ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கியுள்ளனர்.

    • சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
    • உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    சென்னை:

    உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 202 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, புதிய கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.

    திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோவை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசினர் கலை கல்லூரிகள் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • முதலமைச்சர் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்.
    • சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி, இளங்கோ நகர், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் துணை சேவைகளுடன் நிறுவப்பட்டுள்ள டயாலிசிஸ் மையத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்.

    விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-

    சென்னையில் நாளொன்றுக்கு 1000 எம்.எல்.டி. அளவிற்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த 30 ஆண்டுகளுக்கு சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் தொலைநோக்குப் பார்வையோடு 150 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இரண்டு மூன்று மாதங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். மேலும், 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த காலங்களில் பாசன பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரிகள் கண்டறியப்பட்டு அவற்றைத் தூர்வாரி, ஆழப்படுத்தி மழைநீரை சேகரித்து குடிநீர் ஆதாரமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்கள். மேலும், பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்க தற்போது கூட சுமார் 736 நலவாழ்வு மையங்களை அமைக்க உத்தரவிட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

    சென்னையில் 372 இடங்களில் சுமார் 3,732 இருக்கைகள் கொண்ட கழிவறைகள் அமைக்கும் பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் சாலை வசதி, மருத்துவச் சேவைகள், மழைநீர் வடிகால் பணிகள், தெரு விளக்குகள், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் பணிகள் போன்ற அனைத்து விதமான அடிப்படைத் தேவைகளுக்கும் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம்.
    • விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று சந்தித்து பேசினார்.

    அப்போது சில பிரச்சினைகள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி கோரி முதல்-அமைச்சரிடம் மனுக்கள் அளித்தார்.

    அதைத்தொடர்ந்து கே.பாலகிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

    பொதுவுடமை இயக்கங்களின் முன்னோடியான பிடல் காஸ்ட்ரோவுடன் இணைந்து போராடிய மார்க்சிய சிந்தனையாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, அவரது மகள் பேராசிரியர் ஸ்டெபானி ஆகியோருக்கு சென்னையில் வருகிற 18-ந் தேதி வரவேற்பு விழா நடைபெற உள்ளது.

    இதில் முதல்-அமைச்சர் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பிதழ் அளித்தோம்.

    குமரி மாவட்டம் உள்ளிட்ட தென் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடைபெற்ற தோள்சீலைப் போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா, நாகர்கோவிலில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கும் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தினோம். தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் செயல்படும் திருஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பெயரில் வாங்கிய கடன் வலையில் இருந்து விவசாயிகளை விடுவிக்க தமிழ்நாடு அரசு, வங்கி நிர்வாகங்கள் மற்றும் ஆலை நிர்வாகத்தோடு பேசி தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழக அரசுக்கும், மக்களுக்கும் விரோதமாகவும், பழமைவாத சனாதன கருத்துக்களையும், அரசியல் சாசனத்திற்கும் முரண்பாடாக பேசி வருகிறார். கவர்னராக இருந்து கொண்டு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்.

    புதிய கல்விக்கொள்கையை அமலாக்குவது, தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு என்ற பெயரை பயன்படுத்துவது தவறு என பேசி உள்ளது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.

    கவர்னரின் இந்த போக்கு குறித்த தமிழக மக்களின் கொந்தளிப்பான எதிர்ப்பு உணர்வுகளை முதல்-அமைச்சருக்கு தெரியப்படுத்தினோம். அனைத்து பிரச்சினைகளையும் கேட்டறிந்த முதல்-அமைச்சர், எங்கள் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

    கவர்னருக்கு எதிராக தனித்தனியாக போராட்டம் நடத்துவதற்கு பதிலாக அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாக போராட்டம் நடத்தலாம் என தி.மு.க. தலைவர் என்ற முறையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கூறினேன். அதை பரிசீலிப்பதாக அவர் கூறினார்.

    அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழக பா.ஜனதா கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல. அது கிரிமினல் வழக்கு தொடர்பானது.

    அதற்கு பதில் கூறாமல் பத்திரிகையாளர் மீது கோபப்படுவது 3-ம் தர அரசியல்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த சந்திப்பின்போது முன்னாள் எம்.பி. பெல்லார்மின் உடனிருந்தார்.

    • காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்.
    • பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்று முதலமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.

    சென்னை:

    அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் பலம் பெறுமா என்ற எதிர்பார்ப்பும், கேள்விக்குறியும் எல்லோர் மனதிலும் உள்ளது. ராகுல்காந்தி நடத்தும் பாத யாத்திரையும், அருணாச்சல பிரதேசத்தில் கிடைத்துள்ள வெற்றியும் காங்கிரசை வளர்க்க போதாது என்றே கருதப்படுகிறது.

    காங்கிரசுக்கு பல்வேறு மாநிலங்களிலும் தனி செல்வாக்கு பெற்ற மாநில கட்சிகளின் ஆதரவு கிடைப்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளது. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவிலும் காங்கிரசை தாங்கி பிடிக்கும் முதன்மையான தலைவராக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்.

    சமீபத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவின் பழமை வாய்ந்த காங்கிரஸ் தேசிய அளவில் தன் முக்கியத்துவத்தை இழந்துவிடவில்லை. காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை தோற்கடிக்க முடியும்" என்று பேசினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழக காங்கிரசார் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "அகில இந்திய அளவில் விரைவில் காங்கிரசை உள்ளடக்கிய தேசிய கூட்டணியை அமைக்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி உள்ளது. அதே போன்று தேசிய அளவில் கூட்டணி அமைந்தால்தான் பாரதிய ஜனதாவை விரட்ட முடியும்" என்று தெரிவித்தார்.

    மேலும் ராகுல்காந்தியையும் அவர் புகழ்ந்து உள்ளார். இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், "ராகுல் காந்தியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. அவர் நாடு முழுவதும் உள்ள வெறுப்பு அரசியலை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரது வாதங்கள், அணுகுமுறைகள் தெளிவாக உள்ளன. இதன் மூலம் நாட்டின் ஒருமைபாட்டை பாதுகாக்க முடியும்" என்று கூறி உள்ளார்.

    இது தவிர முதலமைச்சர் தனது பேட்டியில் பாரதிய ஜனதாவின் மத அரசியலுக்கு சரியான மாற்றாக ராகுல்காந்திதான் இருக்க முடியும் என்றும் குறிப்பிட்டு உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த பேட்டி டெல்லியில் உள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை நெகிழ வைத்து உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.
    • செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    சென்னை:

    இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ந்தேதி நடந்தது. முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியை தொடங்கி வைத்தார்.

    29-ந்தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

    இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் ஓபன் பிரிவில் 3 அணிகளும், பெண்கள் பிரிவில் 3 அணிகளும் ஆக மொத்தம் 6 அணிகள் கலந்து கொண்டன.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 11-வது மற்றும் இறுதி சுற்று நேற்று நடந்தது. இந்தப் போட்டியின் முடிவில் இந்தியாவின் 2 அணிகள் வெண்கல பதக்கம் பெற்றன.

    ஓபன் பிரிவில் குகேஷ், நிஹல் சரின், பிரக்ஞானந்தா, அதிபன், சத்வானி ஆகி யோரை கொண்ட இந்திய 'பி' அணி வெண்கல பதக்கம் பெற்றது. பெண்கள் பிரிவில் ஹம்பி, ஹரிகா, வைசாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கர்னி ஆகியோர் அடங்கிய இந்திய 'ஏ' அணி வெண்கல பதக்கம் பெற்றது. இது தவிர தனி நபர் பிரிவில் 7 இந்தியர்கள் பதக்கம் பெற்றனர்.

    நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.

    இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற இந்தியாவின் 2 அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டிகளை உலகமே பாராட்டும் வகையில் வெற்றிகரமாக தமிழ்நாடு அரசு நடத்தி முடித்துள்ளது.

    இந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் பொதுப்பிரிவில் 'இந்திய பி அணியும்' பெண்கள் பிரிவில் 'இந்திய ஏ அணியும்' என இரண்டு அணிகள் பதக்கம் வென்று செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்திருப்பது குறித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    44-வது பன்னாட்டு சதுரங்க விளையாட்டு போட்டிகளில் பொதுப் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்ற 'இந்திய பி அணிக்கும்', பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற 'இந்திய ஏ அணி (பெண்கள்)' ஆகிய இரண்டு அணிகளுக்கும் பரிசுத்தொகையாக தலா ஒரு கோடி‌‌ ரூபாய் வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் தங்கமும், அர்மெனியா வெள்ளியும், பெண்கள் பிரிவில் உக்ரைன் தங்கமும், ஜார்ஜியா வெள்ளி பதக்கமும் பெற்றன.

    ×